என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குகநாதீஸ்வரர்"
- திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையான நேற்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. மாலை சாயரட்சை தீபாராதனையும், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடந்தது. பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை சங்கு ஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம்வர செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி காலை யில் கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் அலங்கார தீபாரதனையும் வாகன பவனியும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு பக்தர்களுக்கு அருட்பி ரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நடந்தது
- திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையான இன்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 6.30மணிக்கு அபிஷேகமும் 8மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
பின்னர் காலை 10.30 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அலங்கார தீபாராதனைநடந்தது.
பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3முறை வலம் வரும்நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடக்கிறது.பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3முறை சங்குஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம் வரசெய்கின்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப் படுகி றது. இதற்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துவருகின்றனர்.
- புரட்டாசி மாத திருவாதிரையை யொட்டி நடக்கிறது
- 16-ந்தேதி நடக்கிறது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரதினமான வருகிற 16-ந்தேதி 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
- மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார்
- ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றுஆனி திருமஞ்சன விழா
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில்ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்குமுந்தைய பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளதாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன. குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை இங்கு வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணம் ஆயிற்று. இங்கு உள்ள மூலவரான குகநாதீஸ்வரர் மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றுஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு ஆனி உத்திரத்தன்று திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் 9.45 மணிக்கு வாகன பவனிநடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றிவலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின்னர் பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்