என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மச் சாவு"
- பஸ்சுக்குள் பிணமாக கிடந்தார்
- பணிமனையின் தொழில்நுட்ப பிரிவில் மெக்கானிக் உதவியாளராக பணி செய்து வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 58).
இவர் கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவ ரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்தப் பணி மனையில் செயல்படும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற் சங்கத்தில் முன்பு தலைவராக செயல்பட்டு உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏசுதாசுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மாற்றுப் பணியாக பணிமனையின் தொழில் நுட்ப பிரிவில் மெக்கானிக் உதவியாளராக பணி செய்து வந்தார்.
நேற்று அவர் இரவுப் பணிக்கு வந்துள்ளார். இரவில் அவர் பணிமனையில் நின்ற பஸ்சில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று காலை அவர் பஸ்சுக்குள் பிணமாக கிடந்தார். அவர் எப்படி என்பது மர்மமாக உள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஏசுதாஸ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பணிமனைக்குள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மர்மமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போதை பழக்கத்தை தட்டிக் கேட்டதால் மகன் கொலை
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் புகார்
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அல்மாண்ட்ஸ். இவரது மனைவி சகாயராணி. இவர்களது மகன் நிக்சன் (வயது 29).
இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முட்டம் துறைமுகத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அல்மாண்ட்ஸ், அவரது மனைவி சகாயராணி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு நிக்சன் என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி எனது மகன் வீட்டில் இருந்தபோது அவரை ஒரு சிலர் அழைத்து சென்றனர். பின்னர் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.
மறுநாள் காலையில் முட்டம் துறைமுகத்தில் எனது மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கள் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
போதை பழக்கத்தை தட்டி கேட்ட காரணத்திற்காக அவரை கொலை செய்து விட்டனர். அதற்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்