search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தொகை தினம்"

    • நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது.
    • 1 அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடித்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதின் அவசியம் குறித்து நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து கடைபிடித்தால்தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும்.

    மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நல்வாழ்வு, சிறந்த கல்வி மற்றும் சிறப்பான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.

    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    27.06.2023 முதல் 10.07.2023 வரை மக்கள்தொகை விழிப்புணர்வு காலமாகவும், 11.07.2023 முதல் 24.07.2023 வரை மக்கள் தொகை நிலைப்படுத்தும் காலமாகவும், இருவார குடும்பநல விழாவாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் குடும்பநல ஆலோசனைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம் பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    விழுப்புரம்:

    மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மயிலம் யூனியன் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் இளம் வயது திருமணத்தை தடை செய்வீர், ஒளிமயமான வாழ்விற்கு ஒரு குழந்தை போதுமே, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம், என்பனவற்றை கோஷங்களை எழுப்பி பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம்பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர், குமாரசிவ விஸ்வநாதன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் சேது நாதன் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் கொல்லியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி லட்சுமி வர்ணமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×