search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம் taxation"

    • ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக சென்னையில் 22-ந் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் வணிகப் பொருட்களின் மீது மத்திய அரசு புதிதாக 5 சதவீதம் வரி விதித்து உள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், எம்.எல்.ஏ பூமிநாதன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், எஸ்.பி.ஆர். சிட்டி துணைத் தலைவர் சிவக்குமார், பேரமைப்பு நிர்வாகிகள் மகேந்திர வேல், விஜயன், பாண்டி, லட்சுமி காந்தன், கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்து, மாநில இணைச் செயலாளர் திருமுருகன், மாவட்டச் செயலாளர் அழகேசன் மற்றும் அனைத்து இணைப்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழகம் முழுவதும் வணிகப் பொருட்களின் மீது மத்திய அரசு புதிதாக 5 சதவீதம் வரி விதித்து உள்ளது. இதற்கு எதிராக சென்னையில் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி. வரி அறிவிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் தொழில் செய்ய வேண்டும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வணிகம் செய்பவர்களை அனுமதிக்க கூடாது. தமிழக அரசின் வருவாயில் 85 சதவீதம், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி வழியாக கிடைக்கிறது. மாநில அளவில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை. அனைவரும் முறையாக வரி செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும்.தமிழகத்தில் தொழில் செய்யும் வட மாநிலத்தவர், வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். அவர்களையும் மாநிலத்தில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன் வர வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பணம் கொடுத்தால் தான் வணிகம் செய்ய முடியும் என்ற சூழல் இருந்தது.

    தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் சுதந்திரமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் எந்த தடையும் இல்லை. உறுப்பினர் சேர்க்கை காரணமாக, வணிகர் நல வாரியம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது. அரசுத் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உள்பட யார் தவறு செய்தாலும், முதல்வர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்.

    அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியை வாபஸ் பெற வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். ஜி.எஸ்.டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்வது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×