search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிஸ் டிரஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
    • பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அவசரமாகவும் தீர்க்கமாகவும் கடினமாக உழைக்கும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, திவால் நிலையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான வணிகங்களுக்கு உதவியும் வழங்கியது.

    நமது நாடு புயலால் தொடர்ந்து போராடி வருகிறது. நான் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை நம்புகிறேன். மேலும் பிரகாசமான நாட்கள் வரப்போகிறது என்பதை நான் அறிவேன்.

    புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன் மேலோங்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் சாதிக்க பாடுபட்டு வருகிறேன்.

    ரிஷி சுனக் நம் நாட்டின் நன்மைக்காக எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து நீக்கினார் பிரதமர் லிஸ் டிரஸ்.
    • புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார்.

    மேலும், புதிய நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என தகவல்கள் வெளியாகின.

    • மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.

    லண்டன் :

    இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

    கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது லிஸ்டிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி அவருக்கு நெருக்கமான மந்திரி ஒருவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், "நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கிறோம். இதில் இருந்து வெளியேற வழியில்லை. ஒருவேளை லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார். ஆனாலும் என்னால் அதைப்பார்க்க முடியவில்லை" என தெரிவித்தார்.

    இதையொட்டி ரிஷி சுனக்கின் ஆதரவாளரான மெல் ஸ்டிரைட் கருத்து தெரிவிக்கையில், "நிதிச்சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும், தெளிவான மாற்றத்தைக் காட்ட வேண்டும்" என கூறி உள்ளார்.

    ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி வரியை 19 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், மற்ற வரி குறைப்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று கூறுகிற பிரதமர் லிஸ் டிரஸ், சொந்தக்கட்சியில் இப்போது எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி கையாளப்போகிறார், வரி குறைப்பு திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு பேசுபொருளாகி இருக்கிறது.

    • கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • நெருக்கடியை சமாளிக்கவே கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாக பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக நியமனம் செய்தார். பின்னர் லண்டன் திரும்பியபிறகு 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ், நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

    அப்போது, தனது கவனம் முழுவதையும் முக்கியமான 3 விஷயங்களில் செலுத்தவிருப்பதாக கூறினார். அதாவது தேசிய சுகதார சேவையை மேம்படுத்துவது, மக்களின் மீது உள்ள வரி சுமையை குறைப்பது மற்றும் ரஷியா இடையிலான போரினால் எழுந்திருக்கும் எரிசக்தி பிரச்சனையை சமாளிப்பது ஆகியவற்றில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவிருப்பதாக குறிப்பிட்டார்.


    • உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
    • இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

    இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

    மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார். 


    இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.

    • ஆளும் கட்சி தலைவராக தேர்வான லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.

    இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர்.

    வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை லிஸ் டிரஸ் இன்று சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக அறிவித்தார். தொடர்ந்து அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    • ஆளும் கட்சி தலைவராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார்.
    • இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசிபெற்ற பின் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சு இடையே போட்டி நிலவியது.

    புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

    இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்கள் தலைமையின் கீழ் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
    • ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.

    இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

    நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் லிஸ் டிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
    • இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பின்தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர். அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 26 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி
    • நேரடி விவாதத்திற்கு பிறகு லிஸ் டிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் புதிய பிரதமர் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக முடியும். இதற்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரதமராகும் வாய்ப்பு லிஸ் டிரசுக்கு 90 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக்கிற்கான வாய்ப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. இவர்கள் இருவரை தவிர பிறருக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது பேசிய லிஸ் டிரஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கான ஆதரவு சதவீதம் ரிஷி சுனக்கை விட அதிகரித்து விட்டதாக கருதப்படுகிறது.

    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.
    • டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது.

    இதில் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் ரிஷி சுனக் ஆதரவு பெற்று உள்ளார்.

    மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக் ஒட்டுமொத்த நிகர சாதகமான மைனஸ் 30 மதிப்பெண்ணை கொண்டுள்ளார். அதேநேரம் ட்ரஸ்ஸின் நிகர சாதகத்தன்மை மைனஸ் 32 ஆகும்.

    இதன் மூலம் டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    • லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும்.
    • ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வௌியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் கலந்து கொண்டு நேருக்கு நேர் விவாதித்தனர். அப்போது இருவரும் தங்களது பொருளாதார கொள்கைகள் மற்றும் வரித் திட்டங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் விவாதத்தில் அனல் பறந்தது.

    லிஸ் டிரஸ், தான் பிரதமரானால் நாட்டில் வரியை குறைப்பேன் என கூறிவருவதை குறிப்பிட்டு பேசிய ரிஷி சுனக், "லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும். மேலும் அது அடுத்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

    அப்போது குறுக்கிட்ட லிஸ் டிரஸ், " இங்கிலாந்தை போல் வேறு எந்த நாடும் வரிகளை விதிக்கவில்லை. ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், "நிதி மந்திரியாக இருந்தபோது ரிஷி சுனக் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை உயர்த்தினார். அதனால்தான் நாம் இப்போது மந்தநிலையை எதிர்நோக்குகிறோம்" எனவும் கூறினார். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி காரசாரமாக விவாதித்தனர்.

    ×