search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.10"

    • ஓசூர் பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.
    • வரத்து அதிகரித்து உள்ளதையடுத்து விலை சரிந்துள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் அப்டா மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    ஓசூர் பெங்களூர் பகுதி களில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது.இதை யடுத்து தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. தட்டுப்பாடும் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் தக்காளி வரத்து படிப்படி யாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளியின் விலை குறைய தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த வாரம் தக்காளியின் விலை ரூ.30 ஆக சரிந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக விலை குறைய தொடங்கியது.

    நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.10க்கு விற்பனையானது. அப்டா மார்க்கெட்டில் தக்காளி 30 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை சரிந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை போல் கேரட் பீன்ஸ் பீட்ரூட் விலையும் உயர்வாகவே உள்ளது. ஒரு கிலோ கேரட் ரூ.70-க் கும் பீட்ரூட் ரூ.95-க்கும் விற்கப்பட்டு வருகிறது.மிளகாய் உருளைக்கிழங்கு பல்லாரி சின்ன வெங்கா யத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. இதே போல் வெள்ளரிக்காய் தடியங்காய் சேனைக்கிழங்கு விலையும் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது சற்று குறைந்து

    உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் தக்காளி விலை கடுமையான அளவு உயர்ந்து இருந்தது.30 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ. 1700 வரை விற்கப்பட்டு வந் தது. தற்போது இன்று ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.300க்கு விற்க ப்படுகிறது. வரத்து அதிகரித்து உள்ளதை யடுத்து விலை சரிந்துள்ளது.

    இதே போல் மற்ற காய்கறிகளும் வெளியூர் களில் இருந்தும் குமரி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந் தும் அதிகளவு வர தொடங்கி உள்ளதால் விலை குறைந்து வருகிறது என்றார்

    ×