search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "026 பேர் ஆப்சென்ட்"

    • குருப் 4 தேர்விற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,026 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தா ல்நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-4 தேர்வு 93 தேர்வு மையங்களில் 143 தேர்வு அறைகளில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 42,600 நபர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 36,574 ேபர் மட்டும் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 6,026 பேர் தேர்விற்கு வரவில்லை.

    மேலும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வு நடைப்பெற்றது.

    தேர்வுக்கு 7 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 32 சுற்று குழுக்கள் கண்காணிப்பு பணிகளிலும், 180 காவலர்கள் பாதுகாப்பு பணிகளிலும்வி ண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஐயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×