என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் குறை"
விழுப்புரம்,:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.பின்னர் இந்தகூட்டத்தில் சுமார் 414 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சித்ரா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு இணை பதிவாளர் நளீனா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி.) விஸ்வநாதன், உதவி ஆணையர் (கலால்) சிவா, உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. செயலாளர் டி.ஆர்.செல்வம் பொருளாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தற்போது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த மூன்று, நான்கு வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநகரத் தலைவர் சேகர் துணைத்தலைவர்கள் பொன் மாதவன்,செல்வி விலாஸ் குமார், வட்டாரத் தலைவர்கள் லீனஸ்,சேகர், நாஞ்சில் முருகன், அருள்,ரூபன் ,மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ் ,பிரபா, அஸ்வின் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்