search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரும் நஷ்டம்"

    • கடலூரில் தொடர் மழை சேறும் சகதியுமாக தற்காலிக உழவர் சந்தை மாறியுள்ளது.
    • விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை இயங்கி வந்தது‌. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழவகைகள் காய்கறி வகைகள் போன்றவற்றை வாங்கி சென்று வந்தனர். தற்போது உழவர் சந்தை நவீனமயப்படுத்துதல் காரணமாக தற்காலிகமாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தை மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை மாற்றப்பட்ட சில நாட்கள் பிறகு அவர்களுக்கு உரிய முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகின்றது. இந்த நிலையில் தற்காலிகமாக மாற்ற பட்டு உள்ள உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதிகமாக மாறியது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வைத்து விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்‌.

    மேலும் தினந்தோறும் உழவர் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழ வகைகள் வாழைத்தார்கள் போன்றவற்றை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக சேறும் சகதிகமாக காட்சியளித்த தற்காலிக உழவர் சந்தையில் பொதுமக்கள் குறைந்த அளவில் வந்து பொருட்கள் வாங்கி சென்றதையும், அதில் சரியான முறையில் பொருட்கள் வாங்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சரியான முறையில் பராமரிக்க முடியாமல் காய்கறிகள், பழ வகைகள் சரியாக விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆகையால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உரிய முறையில் தற்காலிக உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் உரிய முறையில் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×