search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் டிவிசன்"

    • மங்கலத்தில் சுமார் 10000, பூமலூரில் 8000, அக்ரஹாரபுத்துரில் 5000, வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகள் உள்ளன.
    • இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சோமனூர் மின் வாரிய டிவிசனுக்கு உட்பட்டு மங்கலம், பூமலூர், அக்ரஹாரப்புத்தூர், வஞ்சிபாளையம், பரமசிவப்பாளையம், அய்யன்கோவில், கோம்பக்காடு, போன்றவை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனை திருப்பூர், பல்லடம், அவினாசி என 3 டிவிசன்களாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனை இணைப்பதற்கு விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் மாற்றம் செய்ய கூடாது. மங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம் அங்கேயே செயல்பட வேண்டும். மங்கலத்தில் சுமார் 10000 இணைப்புகளும் , பூமலூரில் 8000 இணைப்புகளும், அக்ரஹாரபுத்துரில் 5000 இணைப்புகளும், வஞ்சிப்பாளையத்தில் 9000 இணைப்புகளும் உள்ளன. இந்த இணைப்புகளை ஒன்றாக இணைத்து மங்கலம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.

    மங்கலம், வஞ்சிப்பாளையம் ஆகியவற்றை திருப்பூர் டிவிசனுடன் இணைத்திட வேண்டும். மங்கலம் திருப்பூர் நகரத்திற்கு அருகில் உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருப்பூருக்கு வந்து செல்ல எளிதாக இருக்கும். அவினாசியுடன் மங்கலத்தை இணைப்பதை நிறுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

    ×