என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் கம்பெனி ஊழியர்"
- வானூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் எரையானூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வினோத்குமார் தனது வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரி த்து வருகிறார்கள்.
- விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே தென்மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 39) இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மோட்டார் சைக்கிள் மூலமாக திருபுவனக்கு சென்று திரும்பி வருவார் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்பேரிலிருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலை கடந்து வரும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்