என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விலையில்லா"
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
முன்னதாக பள்ளி தமிழாசிரியர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரேவதி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், கபிலர்மலை ஒன்றிய தி.மு.க செயலாளருமான சண்முகம், ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்