search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரைகள் அரிப்பு"

    • சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது.
    • பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எல்லீஸ் அணை கடந்த ஆண்டு உடைந்தது. தற்போது பெய்து வரும் மழை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது. கடந்த சில நாட்களாக வரக்கூடிய இந்த தண்ணீர் ஆற்றில் சமநிலையில் செல்லவில்லை. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும் பாதையாகவும் உருவாகி தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏனாதிமங்கலம் விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 6 கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்த ஆற்று நீர் கிராமங்களுக்கு சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எல்லீஸ் சத்திரம் கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கபட்ட நிலையில் உள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது   பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், புகழேந்தி எம்.எல்.ஏ., திருவெண்ணைநல்லூர் யூனியன் தலைவர் ஓம் சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், எரலூர் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் சென்றனர்.

    ×