search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசிலிங்கேஸ்வரா கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
    • பூசாரி கோடாரியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு இருந்து வருகிறது. அது என்னவென்றால், பக்தர்கள் தங்கள் உடல் பாகங்களில் எங்கேனும் தீராத வலி ஏற்பட்டதாக அறிந்து, அது குணமாக வேண்டி இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

    அவர்கள் இதுபற்றி பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள். அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா, அந்த பக்தர்களை படுக்க வைத்து அவர்களது உடலில் எங்கு வலி இருப்பதாக கூறுகிறார்களோ அந்த பாகத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் வெட்டுகிறார். வெட்டியவுடன் அங்கு மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்களது தீராத வலி குணமாகி விடுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    தற்போது இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் வயிற்று வலி சரியாக வேண்டி வந்த ஒரு வாலிபர் தரையில் படுத்து இருக்கிறார். அவரது கைகளையும், கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள்.

    அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா கோடாரியால் அந்த வாலிபரின் வயிற்றில் ஓங்கி 2 முறை வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டுகையில், வயிற்றை கிழித்துக் கொண்டு கோடாரி சற்று உள்ளே செல்கிறது. ரத்தமும் பீறிட்டு வருகிறது. அப்போது அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். இருப்பினும் அவரது கைகளையும், கால்களையும் 2 பேர் விடாமல் பிடித்துக் கொள்கிறார்கள். பூசாரி கோடாரியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது.

    நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பதறிப்போயினர். மேலும் இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமர்நாத் ரெட்டியின் கவனத்திற்கும் சென்றது.

    உடனே அவர் இதுபற்றி நடவடிக்கை எடுக்க கூறி லோகாபுரா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மூடநம்பிக்கைகளிலேயே நரபலிபோன்று இது ஒரு கொடூரமான மூடநம்பிக்கை என்று கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

    • சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்
    • சொத்து விவகாரத்தில் மோதல்

    கன்னியாகுமரி:

    திங்கள்சந்தை அருகே உள்ள சரல்விளையைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி யன் (வயது 80). இவருக்கு 5 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரது மகன்களில் ஒரு வரான நாகராஜன் (40) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து உள்ளார்.

    நேற்றும் அவர் தகராறில் ஈடுபடவே ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் கோடா ரியால் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திங்கள் சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெற்ற மகனையே கொலை செய்த சவுந்தர பாண்டியன் இரணியல் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் திருமண மாகாமல் இருந்த நிலையில், எனது பெயரில் இருந்த 8 செண்ட் நிலத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். ஆனால் அவன் அடிக்கடி மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தான். இதனால் அவன் மீது நம்பிக்கை இழந்தேன்.

    இதனால் 8 செண்ட் நிலத்தை மீண்டும் எனது பெயருக்கே மாற்ற திட்ட மிட்டேன். இதுபற்றி நாகராஜ னிடம் பேசிய போது அவன் மறுப்பு தெரிவித்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று வீட்டுக்கு வந்த அவனிடம் மீண்டும் சொத்து பிரச்சினை குறித்து பேசி னேன். ஆனால் அவன் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசினான். பின்னர் அவன் வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டான். ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துச் சென்று, மகன் என்றும் பாராமல் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொன்றேன். பின்னர் போலீசில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    ×