search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசோதா"

    • டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ,அகில இந்திய விவசாய சங்க அறைகுவல் ஏற்று டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எழுத்து மூலமாக அளித்துள்ள உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும், குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் டார்ச் லைட்டை அடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஒன்றிய விவசாய சங்க நிர்வாகிகள் செல்வகு மார், ராமலிங்கம், கணபதி, பிரபாகரன், ஜார்ஜ்துரை , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×