search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்"

    • முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது.
    • அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி யில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.

    இதனால் வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மழையளவு

    பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீரபாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 122.50 அடியாக உள்ளது.
    • தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுைர மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 122.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 53 கனஅடியாக உள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 611 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இருந்தபோதும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதும் 50 கனஅடிநீர் திறப்பு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அணையில் நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    வருகிற ஜூன்மாதத்தில் முதல்போக நெல்சாகுபடி தொடங்க உள்ளது. அப்போது தண்ணீர் தேவை. எனவே நீர்திறப்பை குறைக்க வேண்டும் என்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.15 அடியாக உள்ளது. 345 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 67.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 16 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு 678 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 123.30 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது. 432 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.95 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ள நிலையில் மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ளது. மாலைக்குள் 138 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணைக்கு 965 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடித்து வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து 1899 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து மதுைரமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1866 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 178 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 138 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. 127 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 97 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 0.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, போடி 2.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தற்போது மழை குறைந்தபோதும் அணையின் நீர்மட்டம் 134.85 அடியாக உயர்ந்துள்ளது. மழை கைகொடுக்கும்பட்சத்தில் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பெரியாறில் மட்டும் 1.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. தற்போது மழை குறைந்தபோதும் அணையின் நீர்மட்டம் 134.85 அடியாக உயர்ந்துள்ளது. மழை கைகொடுக்கும்பட்சத்தில் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு 1474 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக 69 முதல் 70 அடிவரை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த 71 அடி வரை உயர்த்தப்பட்டு அணையினை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அணைக்கு 1875 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. 135 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடி பாசனத்திற்கும், 95 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 136 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 106 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறில் மட்டும் 1.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.


    • கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.
    • வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மழை ஓய்ந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பருவமழை காலத்தின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 258 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1378 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் 128.65 அடியாக குறைந்துள்ளது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 67.67 அடியாக உள்ளது. 468 கனஅடிநீர் வருகிறது. 1289 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.55அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 17-வது வார்டு கல்லக்கரை ஓடைப்பகுதியை சேர்ந்தவர் சிவா(32). இவர் காஞ்சிமரத்துறை முல்லைபெரியாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிவாவை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இதனைதொடர்ந்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சிவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு வெகுநேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் முல்ைலபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் முல்ைலபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. மேலும் தமிழகபகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டபோதும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. ரூல்கர்வ் முறைப்படி செப்டம்பர் 10-ந்தேதிக்கு பின்னர் 142 அடிவரை தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் உயருமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 2534 கனஅடிநீர்வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70.57 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 2286 அடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. அதுஅப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்ம்டடம் 126.34 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 10.4, தேக்கடி 9.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
    • விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மேலும் முல்லைபெரியாறு, வைகையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது. விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணைக்கு 2143 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. 2485 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 368 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 72 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 14.4, தேக்கடி 5.8, உத்தமபாளையம் 1.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×