search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் 119 அடியாக உயர்ந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
    X
    கோப்புப்படம்.

    தொடர் மழையால் 119 அடியாக உயர்ந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

    • முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது.
    • அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி யில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.

    இதனால் வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மழையளவு

    பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீரபாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×