search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஓபன் டென்னிஸ்"

    • அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது
    • இரட்டையர் பிரிவில் அர்ஜூன் காடே 4வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் காடே- பிரிட்டனின் ஜே கிளார்க் ஜோடி, செபஸ்தியான் (ஆஸ்திரியா)- நினோ செர்டாரசிக் (குரோசியா) ஜோடியை எதிர்கொணட்து. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0, 6-4 என்ற நேர்செட்களில் அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் அர்ஜூன் காடே இரட்டையர் பிரிவில் பெறும் 4வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோ டி அல்போரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் சுமித் நாகல் 4-6, 2-6 என தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற டி அல்போரன் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக் பர்செலுடன் மோதுகிறார்.

    • கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    • சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் லின்டாவிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் 16 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார்.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பெயின் 'இளம் புயல்' கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா கிடுகிடுவென 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.

    அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இறுதி ஆட்டத்தில் அவரிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் (போலந்து) 16 இடங்கள் ஏற்றம் கண்டு 51-வது இடத்தை பெற்றுள்ளார்.

    • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.
    • வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    சென்னை:

    சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

    • இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
    • அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியை ரசித்து பார்த்தனர்.

    நுங்கம்பாக்கம்:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா புருவிர்தோவாவும், போலந்து வீராங்கனை மக்டா லினெட்டும் மோதினர். 


    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 17 வயதான அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். 


    இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டார் கண்டு ரசித்தனர்.

    • இறுதிப் போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி இணை வெற்றி.
    • அன்னா லின்கோவா- நடிலா ஜலாமிட்ஸ் இணை தோல்வி.

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- பிரேசிலை சேர்ந்த லுசா ஸ்டெபானி இணை, ரஷியாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர் கொண்டது.

    இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
    • நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு நடந்தன.

    முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இதில்

    முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றினார்.

    இறுதியில், லிண்டா 5-7, 6-2 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மக்டா லினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக சுவான் விலகினார். இதனால் லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டா லினெட்டும் மோத உள்ளனர்.

    இறுதிப் போட்டியை நேரில் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான்- ஹிபினோ மோதினார்கள்.
    • இன்று இரவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

    ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள்.

    முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.

    2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள்.

    கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3


    போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொண்ட லிண்டா (இடது)-வார்வரா கிராசெவா.

    முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.

    இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    • எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தார்.
    • ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார்.

    முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி 2-வது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியவில்லை. சரிவில் இருந்து மீண்ட புசார்ட் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தார்.

    இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கர்மன் தண்டி, புசார்ட்டை விட அதிக தவறுகளை இழைத்தார்.

    பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது போன்ற எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்தது. புழுக்கத்தால் வியர்த்து கொட்டி நனைந்து போனார்.

    கர்மன் தண்டியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.

    • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே தோல்வி அடைந்தார்.
    • முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ஜெர்மனி வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.

    முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.

    ×