search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்திக்கு"

    • கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது.
    • நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும்

    சென்னிமலை:

    கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவின தொகையினை அதிகரித்து வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது. நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினங்களுக்கான தொகை 2012-ம் ஆண்டு வழங்கபட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் உடனடியாக நெசவாளர்களுக்கு குறைந்தது 50 சதவீதம் அளவிற்கு உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை உயர்த்தி வழங்க ஆவண செய்ய வேண்டும்.

    உற்பத்திக்கு முந்தைய செலவின தொகை சங்கங்களின் நிதி ஆதாரத்திலேயே வழங்கபடுவதால் இதன்மூலம் அரசிற்கு எவ்வித நிதிச்செலவும் இல்லை என்பதினையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    தற்சமயம் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவொரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் இல்லை. நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் உள்ளது. குறைந்தது மாதம் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை மருத்துவ செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×