search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டைமலை சீனிவாசன்"

    • கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்.
    • சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் இன்று.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் இன்று. "கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என முழங்கி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்ததோடு சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடிய இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன்.
    • இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தென்னகத்தின் அம்பேத்கர் என போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்துகொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன்.

    பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டை மலை சீனிவாசன். அவரது பிறந்தநாளில் பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக்கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது

    பெரம்பaலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்து இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் வீரசெங்கோலன், ஜெயவர்த்தனன், வக்கீல் அண்ணாதுரை, பிரேம்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர் தங்கசண்முகசுந்தரம், லெனின், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×