search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் புனித நீராட"

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    பவானி:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டு புராட்டாசி அமா வாசை நாளை (ஞாயிற்றுக்கி ழமை) வரு கிறது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவேரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

    பவானி கூடுதுறைக்கு புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான நாளை ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வார்கள்.

    வழக்கமாக பக்தர்கள் வருவார்கள். மகாளய அமாவாசை என்பதால் வழக்க த்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் பின்பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிக இரும்பு செட் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்கள் புனித நீராட தனித்தனியாக இரும்பு செட் அமைத்தும் அனைத்து விதமான முன்னேற்பாடு நடவடி–க்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் பக்தர்களுக்கு பரிகார பூஜைகளுக்கு தேவையான தேங்காய், வாழைப்பழம் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் கேரி பேக் தவிர்த்து துணிப்பைகளில் பூஜை பொருட்கள் போடப்பட்டு பணியாளர்கள் மூலம் தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளன.

    மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பவானி போலீசார் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறையில் நாளை மகாளய அமாவாசையை யொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×