என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சடலங்கள் மீட்பு"
- மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது.
- அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.
இந்த மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார். அப்போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று தெரிய வந்தது.
பிணமாக கிடந்த அவர்கள் அருகில் ஒரு மொபட்டும், மதுபாட்டில், தண்ணீர் இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- மார்க்கையன்கோட்டை முல்லைபெரியாற்றின் கரையோரம் உயிரிழந்த அசோக் மற்றும் ரவிச்சந்திரனின் உடல்கள் கிடந்தன.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் நாட்டிக்கல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(31). தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி கனிமொழி கம்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டதாகவும், அவரை முல்லைபெரியாற்றில் வீசியதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவரது உடலை ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அசோக்(29) என்பவர் கடந்த 20-ந்தேதி முல்லைபெரியாற்றில் குளிக்கச்சென்றார். அப்போது நீரில் அடித்துச்செல்லப்பட்டு மாயமானார். மேலும் உத்தமபாளையம் ஞானம்பாள் கோவில் படித்துறை ஆற்றில் பெரியகுளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(60), அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களது உடலை தேடி வந்தனர்.
பத்மாவதி உடல் மீட்கப்பட்ட நிலையில் ரவிச்சந்திரன் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் மார்க்கையன்கோட்டை முல்லைபெரியாற்றின் கரையோரம் உயிரிழந்த அசோக் மற்றும் ரவிச்சந்திரனின் உடல்கள் கிடந்தன. அவர்களது உடல்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்