search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கஜா முண்டே"

    • 20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்தும் என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன.
    • சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் பங்கஜா முண்டே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிர அரசியல், கட்சியில் தனது நிலை மற்றும் பாஜக எம்எல்ஏக்களின் மனநிலை தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கட்சியில் நான் அதிருப்தியில் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இதுபோன்ற விவாதங்கள் ஏன் நடக்கின்றன? கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காததுதான் காரணமா? என்னை புறக்கணித்தனர். ஏன் என்று கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    20 ஆண்டுகளாக அயராது கட்சிப்பணி செய்துள்ளேன். இருந்தாலும், என்னைப்பற்றிய வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனது கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள். நான் சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ சந்திக்கவில்லை. வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை. பாஜகவின் சித்தாந்தம் எனது ரத்தத்தில் கலந்திருக்கிறது. வாஜ்பாய் மற்றும் கோபிநாத் முண்டேவின் பாதையில் நான் சென்றுகொண்டிருக்கிறேன். அதேசமயம் நான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சோதனைகள் நடக்கின்றன. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அதைப்பற்றி பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார். மக்கள் அதை விரும்பி ஆதரவு அளித்தனர்.

    நான் கட்சியின் முடிவை எப்போதும் ஏற்றுக்கொள்வேன். யாருடைய முதுகிலும் குத்தியதில்லை. எனது சித்தாந்தங்களில் சமரசம் செய்யவேண்டியிருந்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயங்க மாட்டேன் என்று முன்பே கூறியிருந்தேன். நான் இப்போது இரண்டு மாத விடுமுறையில் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பங்கஜா முண்டேவின் பேட்டி குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பாஜகவில் உள்ள பலர் நீண்ட காலமாக தேசியவாத காங்கிரசுக்கு எதிராக போராடி வருவதாகவும், அக்கட்சியுடனான பாஜகவின் கூட்டணியை உடனடியாக ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், பங்கஜா முண்டேவிடம் பாஜக தலைமை பேசும், அவர் தொடர்ந்து கட்சி பணியாற்றுவார் என்றும் பட்னாவிஸ் கூறினார்.

    • மாநில பாஜகவால் பங்கஜா முண்டே ஓரங்கட்டப்பட்டதாக யூகமான செய்திகள் பரவி வருகின்றன.
    • தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பங்கஜா முண்டே கேபினட் அமைச்சராக இருந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே, பாஜக குறித்து கூறிய கருத்து மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என செயல்பட்டு வருகிறார். அரசியல் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்த்து வருகிறார். 2014-2019 காலகட்டத்தில் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பங்கஜா முண்டே கேபினட் அமைச்சராக இருந்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக, மாநில பாஜகவால் பங்கஜா முண்டே ஓரங்கட்டப்பட்டதாக யூகமான செய்திகள் பரவி வருகின்றன. 

    இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கஜா முண்டே பேசியது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாகி உள்ளது. அவர் பேசும்போது, பாஜக ஒரு பெரிய கட்சி என்றும், அது தனக்கு சொந்தமானது அல்ல என்றும் கூறினார். மகாதேவ் ஜங்கரின் ஆர்எஸ்பி கட்சியை குறிப்பிட்டு பேசிய அவர், "நான் பாஜகவைச் சேர்ந்தவள். என் தந்தையுடன் ஏதாவது பிரச்சனை என்றால், என் சகோதரரின் வீட்டுக்கு செல்வேன்" என்றார்.

    கோபிநாத் முண்டேவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த மகாதேவ் ஜங்கர் கூறுகையில், வேறு யாரிடமோ ரிமோட் கண்ட்ரோல் இருக்ககூடிய என் சகோதரியின் கட்சியால் நமது சமூகத்திற்கு பயன் கிடைக்காது என்றார்.

    பங்கஜா முண்டேவின் இன்றைய கருத்தை வைத்து பார்க்கும்போது, அவர் ஆர்எஸ்பி கட்சிக்கு செல்ல உள்ளதாக சூசகமாக கூறியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்.
    • பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

    மும்பை :

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், மராட்டிய முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாகவும், அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேசியது, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட விரும்புகிறார். நானும் குடும்ப அரசியலின் அடையாளம் தான். ஆனால் உங்கள்(மக்கள்) இதயங்களில் நான் ஆட்சி செய்வதால், பிரதமர் நரேந்திர மோடி கூட என்னை வீழ்த்த முடியாது" என்றார்.

    முண்டேவின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து தனது பேச்சு குறித்து பங்கஜா முண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக எனது உரை இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது.

    பரபரப்பான செய்திகளுக்கு மத்தியில் நேரமிருந்தால் நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும்.

    சாதி அல்லது பண பலத்தை பயன்படுத்தாமல், புதிய பாணி அரசியலில் மக்கள் தங்கள் இடத்தை பிடிக்க வேண்டும். நமக்கு நல்ல அரசியில் கலாசாரம் தேவை என்று குழந்தைகளிடம் நான் குறிப்பிட்டேன். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டினேன்" என்றார்.

    மேலும் கலாசார விவகாரங்கள் மற்றும் வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார், "முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.

    ×