search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித்தேர்வுகள்"

    • மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள்கள் இடம் பெற வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
    • மக்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது. இதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் எம்.பி.க்கள் கூறியதாவது:-

    மதுரை, விருதுநகர் எம்.பி.க்கள் மத்திய அரசை குறை சொல்வதில் அக்கறை காட்டுகிறார்கள். மக்களுக்காக எந்த திட்ட ங்களையும் செய்யவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

    அவர் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வந்து பார்த்துவிட்டு சொல்லட்டும். நாங்கள் என்ன செய்கிறோம்? என்று பார்த்துவிட்டு பேச சொல்லுங்கள். எய்ம்ஸ் விஷயத்தில் மத்திய அரசு பொய் சொன்னால் அதை நாங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

    மத்திய அரசு மதுரை விமான நிலையத்திற்கு ரூ.540 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார்கள். அதற்கான அறிக்கையை தருமாறு கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. மத்திய அரசு கூறும் பொய்யை நாங்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தொடர்ந்து குரல் கொடுப்போம்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீருவோம். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருக்கிறது. இது அப்பட்டமான அநியாயம். நாடு முழுவதும் இந்தி பேசுபவர்கள் 35 சதவீதம் தான் உள்ளனர்.

    ஆனால் இந்தி தெரியாதவர்கள் உள்ள இடங்களையும் இந்த 35 சதவீதம் பேர் நிரப்புகின்றனர். அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள் இல்லாத தால் 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகிறது. எனவே அனைத்து மொழி களிலும் கேள்வித்தாள்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டி, ஜெயராமன், காமாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×