search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் படைவீரர்"

    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொத்துகள் பற்றி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது
    • அனைத்து விபரங்களும் அலுலக முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
    • பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.

    ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

    பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை ( 2022 - 23) வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2022 ஆகும்.மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421 - 2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்திக் கொண்டு 30-11-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரதபிரதமரின் கல்வி உதவிக்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×