search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநீர்மலை"

    • பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. சுமார் 20-க் கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நள்ளிரவு திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் உள்ளே இருந்துள்ளனர். குடோனில் தீப்பற்றியதும் அவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக அவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • பழனியில் புதிதாக ரோப்கார் வசதி ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து ரூ.8 கோடியே 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் இதுபோன்று 5 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்.

    ஆனால் தற்போது 7 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சொன்னதை செய்யும் அரசாகவும், சொல்லாததை செய்யும் அரசாகவும் இந்த அரசு உள்ளது.

    பழனியில் புதிதாக ரோப்கார் வசதி ஏற்படுத்து வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பிறகு பேசிய கருணாநிதி எம்.எல்.ஏ. திருநீர்மலை கோவிலில் அர்ச்சகர்கள் வசதிக்காக ரூ.௧ கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரோப்கார் வசதி செய்து தருவதாக கூறிய முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    ×