search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16 வகை"

    பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஞ்ச நேயர் ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. கணபதி ஹோமம், நீலகண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தி யான இன்று காலை 5 மணிக்கு ராமர் சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆஞ்சநேய ருக்கு 1500 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், பன்னீர், களபம், அரிசி மாவு, விபூதி, தயிர், எலுமிச்சைச்சாறு, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடை பெற்றது. பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தியை யொட்டி இன்று காலை முதலே சுசீந்திரம் கோவி லில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிக மாக இருந்தது. தரிச னத்திற்கு வந்த பக்தர் களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

    கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் ரத வீதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தரிசனத்திற்கு வந்த பக்தர் கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் விட்டுவிட்டு சென்றனர்.

    பாதுகாப்பு பணி

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அனைத்து வாகனங்களும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. நாகர் கோவில் மற்றும் கன்னியா குமரியில் இருந்து சுசீந்தி ரம் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட் டது. சுசீந்திரம் பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வசதியாக தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணிக்கு ராமர் சீதைக்கு புஷ்பாபிஷேகமும் 6:30 மணிக்கு பஜனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு 18 அடி உயர ஆஞ்ச நேயர் சுவாமிக்கு புஷ்பா அபிஷேகம் நடைபெறு கிறது. இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபா ராதனை நடை பெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    ×