என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாகை துறைமுகம்"
- தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
- அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.
இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
- நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 21-ந் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சமிக்ஜை செய்தும் நிற்காமல் விசைப்படகு சென்றதாக கூறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை வானகிரியை சேர்ந்த மீனவர் வீரவேல் (வயது 31) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மேலும் விசைப்படகு மீதும் பல குண்டுகள் பாய்ந்தன.
இந்த தாக்குதலில் காயமடைந்த வீரவேல் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் காயத்துக்கு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகை இன்று இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள் விசைப்படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து படகை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்