search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகை துறைமுகத்தில் இருந்து 83 பயணிகளுடன் இலங்கைக்கு புறப்பட்ட சுபம் கப்பல்
    X

    நாகை துறைமுகத்தில் இருந்து 83 பயணிகளுடன் இலங்கைக்கு புறப்பட்ட 'சுபம்' கப்பல்

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
    • அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.

    சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர்.

    Next Story
    ×