search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம-சபை கூட்டம்"

    • மதுரையில் கிராம- நகர சபை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர், மேயர் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ளாட்சி தினம் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன.

    இங்கு குடிநீர் வினி யோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டி டங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறி நிவாரணம் பெற இயலும். இதில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    கிராம- நகர சபை கூட்டங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மட்டுமின்றி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளலூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அனீஸ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மாநகர உள்ளாட்சி களிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆரப்பாளையம் மந்தை (வார்டு-57), சுந்தரராஜபுரம் ஜே.ஆர்.ரோடு (வார்டு-75), திடீர் நகர் சமுதாயக்கூடம் (வார்டு-76) ஆகிய பகுதி களில் நடத்தப்பட்ட நகர சபை கூட்டங்களில் மேயர் இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இங்கு பொதுமக்களின் கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

    தமிழகத்தில் குடியரசு தினம் (ஜனவரி 26-ம் தேதி), உழைப்பாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15-ம் தேதி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2-ம் தேதி) ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×