என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணக்கீடு"
- உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
- கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியான NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்பிப்புறமாக ரிவர்ஸில் சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.
இயற்கையாக உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது. நிலவில் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியான NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில், பூமியின் இந்த மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளின் கூறி வரும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
- பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் அழுகும் நிலை.
- பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
மெலட்டூர்:
கொத்தங்குடி அருகே தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், துணை இயக்குனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலை ஏற்பட்டது.
இது குறித்த செய்தி மாலைமலரில் செய்தி வெளிவந்திருந்தது.
இதன் எதிரொலியாக மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், சென்னை, துணை இயக்குனர்ஆ கியோர் தலைமையிலான வேளாண்மைத்துறை உயர்அதிகாரிகள் உதா ரமங்கலம் பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டனர்அப்போது விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு நிவாரனம் வழங்க வேண்டு மென வலியுறுத்தினர்.
உடன் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மற்றும் உரங்கள் சென்னை, தஞ்சை வேளாண்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்பட வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா நடவு செய்த விவசாயிகள்.
- பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரண தொகை வழங்க வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் கடந்து சில தினங்களாக மூழ்கிய நிலையில் நாற்றுகள் உள்ளன.
ரெகுநாதகாவேரி வாய்க்கால் பல வருஷமாக தூர்வாராத காரணத்தால் மழைநீர் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்திருந்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு உடனடியாக அரசு உரிய நிவா ரண தொகையை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவிநாசியை மையப்படுத்தி மட்டுமே தாசில்தார் குடியிருப்பு பகுதியில் மழைமானி வைக்கப்பட்டு மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது.
- சேவூரை மையப்படுத்தி மழைமானி வைத்து, மழைப்பொழிவை அளவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவினாசி:
அவிநாசி மற்றும் சேவூர் பகுதி சார்ந்த மழைப்பதிவில் வித்தியாசம் தென்படுகிறது. ஆனால் அவிநாசியை மையப்படுத்தி மட்டுமே தாசில்தார் குடியிருப்பு பகுதியில் மழைமானி வைக்கப்பட்டு மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
இத்தகைய முரண்பாடுகளை களைய, அவிநாசி மற்றும் சேவூரை மையப்படுத்தி மழைமானி வைத்து, மழைப்பொழிவை அளவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையறிந்த வருவாய்த் துறையினர் சேவூர், கருவலூர், துலுக்கமுத்தூர், பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் மழைமானி வைத்து மழையளவை துல்லியமாக கணக்கிட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல், மழையளவில் வித்தியாசம் உள்ள மாவட்டத்தின் பிற இடங்களிலும் மழைமானி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்