என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அந்தேரி இடைத்தேர்தல்"
- மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது.
- அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிட்டார்.
இதற்கிடையே, இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த வெற்றி போராட்டத்தின் ஆரம்பமாகும். இனி வரும் அனைத்துப் போராட்டங்களிலும் ஒற்றுமையாக போராட வேண்டும் என சிவ சைனியர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன. ஆனால் இதை விரும்பியவர்கள் தேர்தல் வளையத்திற்கு அருகில் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களுக்கு (உத்தவ் தரப்பு) ஆதரவளிப்பதை காட்டுகின்றன என தெரிவித்தார்.