என் மலர்
நீங்கள் தேடியது "லல்லு பிரசாத்"
- சிறுநீரகம் பாதிக்கப்பட்ட லல்லுபிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய அவரது மகள் ரோஷினி முன்வந்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் ரோஷினி இதற்காக டெல்லி வந்துள்ளார்.
- ரெயில்வேயின் குரூப்-டி, தேர்வுகளில் சிலர் விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டனர்.
- லல்லு பிரசாத்தின் குடும்பத்தினர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக லல்லு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரெயில்வேயின் குரூப்-டி, தேர்வுகளில் சிலர் விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டனர்.
அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலம் லல்லு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு லல்லு குடும்பத்தினர் நேரடியாக வாங்கியுள்ளனர் என்று சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லல்லு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணையில் பீகார் மாநிலம் பாட்னா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள 6 அசையா சொத்துகள், டெல்லியில் உள்ள 4 மாடி பங்களா, பாட்னாவில் உள்ள 2 நிலங்கள், காஜியாபாத்தில் உள்ள 2 தொழில் மனைகளின் ஒரு பகுதி என லல்லு பிரசாத்தின் குடும்பத்தினர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.6.02 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லல்லு சொல்லிக் கொடுத்தவாறு ராகுல் காந்தி மட்டன் உணவை சமைத்தார்.
- சமையல் போலவே அரசியலிலும் கலக்காமல் எதுவும் சாத்தியமில்லை என்று ராகுலிடம் லல்லு குறிப்பிட்டார்.
புதுடெல்லி:
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மும்பையில் நடந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை வழங்கினார். இது தொடர்பான 7 நிமிட வீடியோவை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்- மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பார்தியின் வீட்டில் வைத்து மட்டன் உணவு தயாரிப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.
சமையல் செய்வதில் திறமைசாலியான லல்லு பிரசாத் யாதவ் பீகாரின் புகழ்பெற்ற 'சாம்பரான்' மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து ராகுல் காந்திக்கு வழங்கினார். மேலும் பல்வேறு சிறப்பு உணவுகள் குறித்தும் அவர் குறிப்புகளை வழங்கினார்.
லல்லு சொல்லிக் கொடுத்தவாறு ராகுல் காந்தி மட்டன் உணவை சமைத்தார். பின்னர் அந்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். ராகுல் காந்திக்கு எப்படி சமைப்பது என்பது பற்றி லல்லு சொல்லி கொடுப்பதும் பின்னர் சாப்பிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
எனக்கு சமைக்க தெரியும். ஆனால் நான் நிபுணர் அல்ல. ஐரோப்பாவில் பணிபுரியும் போது நான் சமைக்க கற்றுக் கொண்டேன். நான் தனியாக இருந்ததால் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. என்னால் அடிப்படையான உணவுகளை மட்டுமே சமைக்க தெரியும்.
லல்லுஜி இதில் (சமையல்) சாம்பியன், நான் அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். லல்லு சமைத்த மட்டன் உணவை எனது சகோதரி பிரியங்காவுக்கு எடுத்துக் சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே தனது சகோதரர்களிடம் இருந்து சமைக்க கற்றுக் கொண்டதாக ராகுல் காந்தியிடம் லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.
இருவரும் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது அரசியல் குறித்து பேசினார்கள். சமையல் போலவே அரசியலிலும் கலக்காமல் எதுவும் சாத்தியமில்லை என்று ராகுலிடம் லல்லு குறிப்பிட்டார்.
இந்த உணவு பரிமாற்றத்தின் போது பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரி மிசா பார்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.