search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சயித் அப்ரிடி"

    • அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.

    பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.

    இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.

    ×