என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி"
- கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- தேனி நகர் சாலையில் இரயில்வே மேம்பாலமும் அமையவுள்ள இடங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கனிம வளத்துறையின் சார்பில் குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
தமிழக அரசு குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திட உத்தரவிட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 உடைகல் குவாரி, 9 மண் குவாரி, 4 கிராவல் குவாரிகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திட வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதனை முறையாக கண்காணித்திட வேண்டும்.
மேலும், அமைப்பு சாரா தொழில்களில் ஒன்றான குவாரி தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், காப்பீடு செய்தல், விபத்து காப்பீடு செய்தல் போன்றவற்றை தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை (சமூக பாதுகாப்பு திட்டம்) தொடர்பு கொண்டு, குவாரியில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் பட்டியலை அந்தந்த தொழிலாளர்களுடன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தேனி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் கொச்சின் - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் முதல் மதுரை நோக்கி செல்லும் சாலையில் நேரு சிலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஓர் பிரிவகை மேம்பாலம் மற்றும் நேருசிலை சந்திப்பு முதல் பெரியகுளம் செல்லும் சாலையில் இரயில்வே சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி நகர் சாலையில் ஓர் இரயில்வே மேம்பாலமும் அமையவுள்ள இடங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்