என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவவீரர்"
- நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
- 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் இந்தியா -பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இராணுவ வீரர்கள் வால்ரஸ் டேவிட், அஜ்மல் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது முன்னாள் ராணுவ வீரரும் வால்ரஸ் நிறுவனத்தின் இயக்குனருமான வால்ரஸ் டேவிட் பேசியதாவது:- 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது, விடுதலைப் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.
மழையிலும் வெயிலிலும், பனியிலும் ராணுவ வீரர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகிறார்கள் .அவர்களை அனைவரும் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், விக்னேஷ், ஜெயசந்திரன், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிறகு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய நாடு என் நாடு, என் நாட்டை பெரிதும் நேசிப்பேன், ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்க தவறமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.