search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுகுமலை"

    • கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகாசல மூர்த்தி கோவில் அமைந்துள்ளது.
    • முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9-ம் ஆண்டு மலர் காவடி விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகாசல மூர்த்தி கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் தென்பழனி என அழைக்கப்படும் இக்கோவில் ஆண்டு தோறும் உலக மக்களின் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் என மலர் காவடி எடுத்து வழிபாடும் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல் இந்த ஆண்டு முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு மலர் காவடி விழா நடைபெற்றது. இதையொட்டி கழுகாசல மூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் காவடி மேள தளம் முழங்க மயில் காவடி ஆட்டம் நடைபெற்றது. மயில் காவடி ஆட்டத்துடன் நடைபெற்ற விழாவில் அதிகமான சிறுவர், சிறுமிகள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரம்மச்சாரிய சுவாமிகள், தருமை யாதீனம் கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட முக்கிய ஆதினங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கி மலர் காவடி ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர்.

    குழந்தைகள் பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கழுகாசலமூர்த்தி கோவில் கிரிவலம் பாதை வழியாக அரோகரா என முழக்கம் எழுப்பியும் முருகன் துதி பாடி மலர் காவடி எடுத்து ஊர்வலமாக சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த மலர்காவடி பூக்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடை பெற்றது.

    • உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்
    • மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

    ரேசன்கடை திறப்பு

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேறு வழி இல்லாமல் தி.மு.க . முன்னணி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆவின் விலை எற்றம்

    வார்த்தைகளுக்காக உதயநிதி ஸ்டாலினை புகழந்து பேசினாலும், அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் புழுக்கம் எல்லோருக்கும் தெரியும். அது காலம் நேரம் வரும் போது தெரியும்.

    தி.மு.க.வில் நிலை அப்படித்தான் உள்ளது. எங்கள் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கே.என்.நேரு.

    மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொதித்து போய் உள்ளனர்.

    தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகாத்தான வெற்றி பெறும்.

    எல்லா கட்சிகளும் தனியாக போட்டியிட தயராக இருந்தால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயராக உள்ளது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆவினில் பால், ெநய், வெண்ணை உள்ளிட்ட வைகளின் விலைகளை உயர்த்தி உள்ளனர். மக்கள் மீது தி.மு.க. அரசு தொடர்ந்து சுமையை தான் சுமத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×