search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்எஸ்இடி அட்டன்டென்ஸ்"

    • கடந்த 2 மாதங்களாக இந்த செயலி தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த உத்தரவு.

    சென்னை :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகைப்பதிவுக்கு என்று ''டி.என்.எஸ்.இ.டி. அட்டன்டென்ஸ்'' என்ற செயலி கல்வித்துறையால் தனியாக உருவாக்கப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக இந்த செயலி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியை அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    ஏற்கனவே வருகைப்பதிவுக்கு என்று இருக்கும் செயலியில் இருந்து வெளியேறி புதிய செயலியிலேயே வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு, பழைய செயலி வருகிற 31-ந்தேதி முதல் செயல்படாது என்றும் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளைகளில் வருகைப் பதிவுகள் எடுக்கப்பட வேண்டும். இணையவசதி இல்லாத நேரங்களில் வருகைப்பதிவு செல்போனில் பதிவாகி, பின்னர் இணைய சேவை கிடைத்ததும், அதுவாகவே 'அப்டேட்' ஆகிவிடும் என்றும், இந்த நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ×