search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்நகர்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு வாங்கி வந்த நிலையில் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சாஸ்தாநகர், விஷ்ணுபுரம், விஷ்ணுபுரம் காலனி, ததேயூஸ்புரம் மற்றும் ராஜீவ்நகர் ஊர் பொதுமக்கள் பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க வேண்டுமென தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ்நகர் பகுதியில் உள்ள கட்டிடம், ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடையினை திறந்து வைத்து முதல் விற்பனையை யும் தொடங்கி வைத்து பேசுகையில், இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் அரிசி, கோதுமை போன்ற நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு வாங்கி வந்தார்கள். இந்நிலையை மாற்றி இன்று உங்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குகின்ற வகையில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் மகராஜபிள்ளை ஆகியோர் இப்பகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார்கள். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். பகுதி நேர நியாயவிலைக் கடையினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.

    இறச்சகுளம் ஊராட்சித் தலைவர் நீலகண்ட ஜெகதீஸ், தோவாளை ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×