search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பைப்புகள்"

    • அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
    • புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அம்ருத் 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ. 36.44 கோடி மதிப்பீட்டில் நெருக்கடி மிகுந்த நகா்ப்புற வசிப்பிட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். 10 புதிய மேல்நிலை குடிநீா் தொட்டிகள், 142.17 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிப்பு, 16,462 குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே செருப்பாலூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் உபயதாரர்கள் சார்பில் மாணவிகள் கை கழுவும் பகுதியில் 6 ஸ்டீல் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் பள்ளி ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த போது மாணவிகள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 குழாய்கள் திருடப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் கழிவறையினுள்ள பைப் இணைப்புகளும் திருடப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் இது போன்று இப்பள்ளியில் மாணவர்கள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 ஸ்டீல் குழாய்கள் திருட்டுப் போயிருந்தன.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்தன் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த பள்ளியின் அருகில் உள்ளவர்களிடமும் விசாரனை நடத்தி வருகிறார்கள். திருட்டில் ஈடுப்பட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ×