search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்"

    • பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள்.
    • 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2024-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள்.

    பள்ளி மாணவர்களை, வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்துவதை விட்டுவிட்டு, 12-19 வயது வரை ஒரே பிரிவாக அறிவித்திருப்பது, உண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு, தனது துறை குறித்த புரிதலோ, இந்த விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்ற தெளிவு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    உடனடியாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கும், பள்ளி மாணவர்கள் 12-19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு வகுத்திருக்கும் அடிப்படையான விதிமுறையின்படி, தமிழக முதல்-அமைச்சர் கோப்பை 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3-ந் தேதி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர் என தனித்தனியாக தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 15-ந் தேதி நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. மேலும், பொது பிரிவினருக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர் என தனித்தனியாக தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    தடகளம் மற்றும் வாலிபால், கால்பந்து, சிலம்பம், டேபிள் டென்னிஸ், கபடி, பேஸ்கெட் பால், நீச்சல், கிரிக்கெட், ஹாக்கி, செஸ் உள்ளிட்ட பல்வேறு குழு மற்றும் தனிநபர் போட்டிகள் நடத்தப்பட்டது. 15-ந் தேதி நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. மேலும், பொது பிரிவினருக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இறுதி போட்டியில் நாமக்கல் மற்றும் குமாரபாளையம் ஸ்போர்ட்ஸ் சங்கத்தினர் விளையாடியதில், நாமக்கல் ஸ்போர்ட்ஸ் சங்கம் வெற்றி பெற்றது.

    2 வாரம் நடந்த இப்போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவியர் 6,048 பேர், கல்லூரி மாணவ, மாணவியர் 4,007 பேர், அரசு ஊழியர்கள் 924 பேர், பொது பிரிவினர் 798 பேர், மாற்றுத்திறனாளிகள் 123 பேர் என, மொத்தம் 11 ஆயிரத்து, 900 பேர் பங்கேற்றனர்.

    போட்டிகளில், முதலிடம், 2 மற்றும் 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.

    அனைத்து போட்டி களிலும், வெற்றி பெறு பவர்களுக்கு, மொத்தம் ரூ. 41.58 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமையில், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×