என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிலிகான் வேலி வங்கி"
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
- அப்போது வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதையடுத்து, திவாலான வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க அமெரிக்க நிதி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஜோ பைடனிடம், வங்கிகள் சரிவைச் சந்திருக்கின்றன..... என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா... இதனால் எந்த விளைவும் ஏற்படாது என அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதனால் அதிபர் ஜோ பைடன் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.
- சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பதாக கூறி உள்ளன.
- வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிகான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதில் வைப்புத்தொகை வைத்திருந்த சர்வதேச நிறுவனங்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பதாக கூறி உள்ளன. இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சிலிகான் வேலி வங்கியானது ஸ்டார்ட்அப் மற்றும் மூலதன நிறுவனங்களிடம் டெபாசிட் பெறுவது மற்றும் நிதியுதவி அளிக்கும் பணிகளை செய்து வருகிறது. தற்போது அதன் பங்குகள் அதல பாதாளத்திற்கு சரிந்து, வங்கி திவால் ஆனதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், வங்கி நெருக்கடி தற்போது கட்டுக்குள் இருப்பதாக நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை அளித்துள்ளார்.
சிலிகான் வேலி வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும், வரிசெலுத்துவோருக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், வங்கிகள் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு செலுத்தும் கட்டணத்தில் இருந்து பணம் வரும் என்றும் பைடன் கூறியிருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்