search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் பாதுகாப்பு"

    • மக்களின் பாதுகாப்பு-நம்பிக்கைக்கு உரிய அரசாக தி.மு.க. இல்லை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலா ளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கட்சியினருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. காவல் நிலையத்தில் சென்று தாக்கும் சம்பவம் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. இந்த அரசு மக்களின் பாதுகாப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய அரசாக இல்லை.

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு தமிழகத்தில் புதிய தடுப்பணைகள் மற்றும் புதிய திட்டங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வைகை அணை, குண்டாறு சீரமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

    ஆவின் நிறுவனமும் மக்களுக்கு தேவையான பால் பொருட்களை வழங்குவதில் சிரமப்படுகிறது. இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக அரசிடம் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×