என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மானியத்தில் வீடு"
- ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.
- இந்த வீட்டில் ஒரு பல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
திருப்பூர் :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்மேயர் தினேஷ்குமார் 16 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் தலாரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.33.60 லட்சம் மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகள் இல்லாத ஏழை, எளியோருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும்திட்டத்தினை துவக்கி வைத்து அதனை செயல்படுத்த உத்தரவிட்டார்.அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் அனைவருக்கும் வீட்டு வசதிதிட்டத்தின் கீழ் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 400சதுர அடிக்கு மிகாமல் புதிதாக கான்கிரீட் தளம் போட்ட வீடு கட்டிக்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக தலா ரூ. 2.10 லட்சம் வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் வகையில் மொத்தம் ரூ.33.60 லட்சம் அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
400 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் இந்த வீட்டில் ஒருபல்நோக்கு அறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் இந்த வீடு அமைக்கப்பட உள்ளது.இவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமான ரூ.2.10 லட்சம்நான்கு கட்டங்களாக வங்கியில் வரவு வைக்கப்படும். அதன்படி, கட்டிடஅடித்தளம் அமைத்த பின் ரூ. 50,000, கட்டிட லிண்டல் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட பின் ரூ. 50,000, மேலும் வீட்டின் முழு பணிகளும் முடிவடைந்த பின்னர் ரூ.60,000 வழங்கப்படும்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள்முறையாக 12 மாதங்களுக்குள் கட்டிட வேலைகளை முடித்து சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். அப்போது திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.