search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பார்க்கிங்"

    • 91 லட்சம் ரூபாய்க்கு இந்த வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ஏலம் போனது.
    • நிதியாண்டு முடிவடையுள்ள நிலையில் அடுத்த மூன்று நிதியாண்டுக்கு ஏலம் நடத்தப்படுகிறது.

    திருப்பூர்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூரில் கட்டியுள்ள பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம், புது பஸ் நிலையம் வளாகம் மற்றும் பார்க்கிங் வளாகம் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களுக்கு அடுத்த 3 நிதியாண்டுக்கான உரிமத்துக்கு ஏலம் நடைபெறுகிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் காமராஜ் ரோடு மத்திய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கடந்த செப்டம்பர் மாதம் ஏலம் விடப்பட்டது. அப்போது 91 லட்சம் ரூபாய்க்கு இந்த வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ஏலம் போனது.

    தற்போது நிதியாண்டு முடிவடையுள்ள நிலையில் அடுத்த மூன்று நிதியாண்டுக்கு ஏலம் நடத்தப்படுகிறது. இதற்கு முன் ஏலம் எடுத்த ஏலதாரர், கட்டுப்படியாகவில்லை என புதுப்பிக்க முன் வரவில்லை. எனவே புதிதாக ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான ஏலம் 28-ந் தேதி நடக்கிறது. இது தவிர பி.என்., ரோடு புது பஸ் நிலையம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள், பார்க்கிங் வளாகம், வெள்ளி விழா நினைவு பூங்கா நுழைவு கட்டணம் வசூலித்தல், இடுவாயில் அமைந்துள்ள மூங்கில் பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கும் அன்றைய தினம் ஏலம் நடைபெற உள்ளது.

    ×