search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச உணவு"

    • ரம்ஜான் நோன்பு திறக்க இளைஞர்கள் இலவசமாக உணவளிக்கின்றனர்.
    • இளைஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பு மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆலிம்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்து வமனையில் உள்நோயாளிகளுக்கு துணை இருப்ப வர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரமலான் நோன்பு வைப்ப தற்கான சஹர் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செய்யது அகமது கபீர் கூறியதாவது:-

    12 பேர் கொண்ட இளைஞர் குழு மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரைக்கும் இலவச உணவு வழங்குகிறோம்.

    பெரும்பாலும் நேரில் வந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவ மனையில் இருப்பவர்கள், வீடுகளில் ஆண் உதவி இல்லாத தாய்மார்களுக்கு எங்கள் அமைப்பின் இளைஞர்கள் வீடு தேடி போய் உணவை வழங்கி வருகின்றனர்.

    இலவச உணவு வழங்கு வதில் நாளொன்றுக்கு ரூ, 25 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை செலவாகிறது. எங்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.

    நல்லுள்ளம் கொண்ட ஈகையாளர்கள் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவுக்கான பொருளாகவோ வழங்கி னால் ரமலான் முழுவதும் இலவச உணவு வழங்க உதவியாக இருக்கும் என்றார்.

    அமைப்பு நிர்வாகிகள் பாஹிம், ஹமீது, சாலிம், நுஸைர், ஜியாவுல், ஷஹாதத், பாக்கர், முஜீபு ரஹ்மான், காசீம், ஹம்தான், ஜெய்னுலாப்தீன் இவர்களுடன் கீழக்கரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இணைந்து இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை உணவு வழங்கும் பணியை சேவை யாக செய்து வருகின்றனர்.

    தூய பொதுசேவைகளின் மூலம் சிறந்த எடுத்துக் காட்டாக வாழும் இளை ஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகி ன்றனர்.

    ×