search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்கள் People"

    • தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    • நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், திட்ட இயக்குனர் மணி, கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்கள் 348 மனுக்களை அளித்தனர். அதனை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கருணா நிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாக ராஜன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வ கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், அய்யம்மாள் ராஜேந்திரன், கோவிந்தம் மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாவீர மணி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூரில் நடந்த முகாமில் மொத்தம் 283 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    ×