search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சுட்டுக்கொலை"

    • வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் தாகூர்கஞ்ச் காவல்நிலையை எல்லைக்கு உட்பட்ட பெகாரியா கிராமத்தில் மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் வீடு உள்ளது. இங்கு நேற்று இரவு 6 பேர் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த வினய் ஸ்ரீவஸ்தவா என்பவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே வினய் ஸ்ரீவஸ்தவா சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்த தாகூர்கஞ்ச் போலீசார் விரைந்து வந்து கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட வினய் ஸ்ரீவஸ்தவா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    பலியான வினய் ஸ்ரீவஸ்தவா மத்திய மந்திரி கவுஷல் கிஷோரின் மகன் விகாஸ் கிஷோரின் நண்பராவார். கொலை நடந்த இடத்தில் இருந்து விகாஸ் கிஷோரின் கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    • பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது.
    • கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.

    பஞ்சாபின் டர்ன் தரானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டர்ன் தரான் மாவட்டத்தில் எல்லையோர கிராமமான தெகலான் அருகே விலும் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் திரிந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். தொடர்ந்து அவர் எல்லைநோக்கி விரைந்ததால் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் குண்டு பாய்ந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.

    • மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை அடித்து துன்புறுத்தினார்.
    • செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காளஹஸ்தி, எஸ்டி காலனியை சேர்ந்தவர் செஞ்சைய்யா. கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.

    மது போதையில் வந்த செஞ்சைய்யா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார்.

    வலி தாங்காமல் அவர்கள் கதறி அழுதனர். இவர்களது அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்தய்யா (33) என்பவர் ஓடி வந்து செஞ்சைய்யாவை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சிந்தய்யாவை நோக்கி சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிந்தய்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிந்தய்யா இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காளஹஸ்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிந்தய்யாவின் பிணத்தைமிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் செஞ்சைய்யாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கொலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வீரா பகுதி நேர வேலை பார்த்து வந்து உள்ளார்.
    • மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வீராவை சுட்டான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    நியூயார்க்:

    ஆந்திர மாநிலம் எலுரு நகரை சேர்ந்தவர் சயீஷ் வீரா (24). இவர் அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்புபடித்து வந்தார். கொலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வீரா பகுதி நேர வேலை பார்த்து வந்து உள்ளார்.

    இந்த நிலையில் வீரா பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அவரை வீரா தடுக்க முயன்றார். அந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வீராவை சுட்டான். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய வீராவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீரா பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் 10 நாட்களில் பட்டப்படிப்பை முடிக்க உள்ள நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் உயிரிழந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொலையாளியின் புகைப் படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×