search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10-ம் வகுப்பு மாணவர்கள்"

    • 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு சச்சின் என்கிற பிரதீப் (15), மற்றொரு மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் சச்சின் என்கிற பிரதீப் பெருந்துறையில் உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார். அவரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த உறவினர் அழகிரி மகன் வினோத் (14) என்பவரும் அதே டுட்டோரியல் கல்லூரியில் 10 -ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் காலை சச்சின் என்கிற பிரதீப், வினோத் டுட்டோரியல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

    அதன் பின்னர் மாலையாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது இன்று அவர்கள் வகுப்புக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்களுடன் படிக்கும் லோகேஷ்(15) என்ற மாணவனும் மாயமாகி உள்ளார். 3 மாணவர்கள் குறித்து அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் இல்லை.

    இதனையடுத்து அவர்களது பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தங்களது மகன்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    • 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குமரன் கல்விக் குழுமத்தின் தலைவர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஸ்ரீகுமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். இத்தேர்வில் ஊட்டி, கோத்தகிரி மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் 2 மாணவர்களுக்கும், 2-ம் பரிசாக தலா ரூ.7 ஆயிரத்து 500 மூன்று மாணவர்களுக்கும், 3-ம்பரிசாக தலா ரூ.5 ஆயிரம் 5 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை ஸ்ரீ குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ குமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளியும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் தமிழாசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

    ×