என் மலர்
நீங்கள் தேடியது "விஞ்ஞானி சாவு"
- மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணி நடை பெற்று வருகிறது.
- 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வந்தார்.
நாகர்கோவில் :
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணி நடை பெற்று வருகிறது.
இந்த பணியில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட விஞ்ஞானி கள் பணியாற்றி வருகின்ற னர். ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு தலைமை விஞ்ஞானியாக ரஷ்யாவைச் சேர்ந்த வடிம் கிளிவ்னென்கோ (வயது 62) செயல்பட்டு வந்தார்.
விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் செட்டிக்குளத்தில் உள்ள அணுவிஜய் நகரிய குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோவும் அங்கு தான் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அணுவிஜய் நகரி யத்தில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
பின்னர் விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோ நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் வந்த விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோ 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வந்தார். அவரது திடீர் மறைவு சக விஞ்ஞானிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானி வடிம் கிளிவ்னென்கோ உடலை தூதரகம் மூலம் ரஷ்யா கொண்டு செல்ல அணுமின் நிலைய நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது.